முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சேலத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா சேலத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இருசக்கர வாகனத்தை ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தார் 29வது சாலை பாதுகாப்பு வாரவிழா சேலத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள்இ காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை சிறிதுதூரம் ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி இந்த பேரணி உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. அங்கு போக்குவரத்து வாரவிழாவையொட்டி மாணவர்களிடம் கருத்தரங்கு நடைபெறுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து