முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

Source: provided

நைஜீரியா : ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "நைஜீரியாவில் பெனு மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றில் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பாதிரியார்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கால்நடை மேய்க்கும் முஸ்லிம் சமூகத்தினர் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்” என்று  வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்கு தீ வைத்து அங்குருக்கும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன.

நைஜீரியாவின் தென் மத்திய பகுதியில் கிறிஸ்தவர்கள் வேளாண் தொழிலும், இஸ்லாமியர்கள் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மோதலில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து