முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டார வளமைய பயிற்றுனர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத்துறை,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் வட்டார வளமைய (ஆசிரியர்கள்) பயிற்றுனர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்  நடைபெற்றது.
 இப்பயிற்சியில், குழந்தைகளுக்கு சமூக ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள், பணிக்கு செல்லும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், தெருவோர சிறார்கள், பாலியல் தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகள், போதை பழக்கத்திற்கு அடிமையாகும் குழந்தைகள், எச்.ஐ.வி  எய்ட்ஸால் பாதிக்கப்படும் குழந்தைகள், அங்கவீனம் குறைபாடு உள்ள குழந்தைகள், சிறையில் உள்ள குழந்தைகள், அரவாணிக் குழந்தைகள் பாதுகாப்பது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள், சுரண்டல், உதாசீனப்படுத்துதல் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது குறித்தும், உடல் ரீதியான துன்புறுத்தல், மனரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்தும் அவர்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து வட்டார வளமைய (ஆசிரியர்கள்) பயிற்றுனர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தடுத்திடவும், பள்ளி செல்லாமல் எந்த குழந்தையும் குழந்தை தொழிலாளர்களாக பணி அமர்த்தக் கூடாது என்பதனை உறுதிப்படுத்திடவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள், சேவைகள் குறித்து எளிதாக கிடைத்திட வழிவகை செய்வது குறித்தும், மேலும், பெண் குழந்தைகள் திருமணம், பாலியியல் தொந்தரவு போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ அல்லது பாதிப்புக்குள்ளானாலோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், குழந்தைகளுக்கான அவசர தொலைபேசி எண்னான 1098 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வட்டார வளமைய (ஆசிரியர்கள்) பயிற்றுனர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி , மகளிர் திட்ட அலுவலர்  கல்யாண சுந்தரம்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முனைவர் பா.சத்தியநாராயணன்  ,பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)  ரோஸ்லின்  , வட்டார வளமைய (ஆசிரியர்கள்) பயிற்றுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து