முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருடன் விவசாய பிரதிநிதிகள் சந்திப்பு: அரசின் குடிமராமத்து திட்டத்திற்கு பாராட்டு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பல்வேறு பிரதிநிதிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசினர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

கோரிக்கை...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பில் இந்திய விவசாயிகளி் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.விருதகிரி, தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் கே.செல்லமுத்து, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் ராஜ்குமார், தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட பத்து விவசாயி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர். அப்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்து திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலாண்மை வாரியம்...

இந்த சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வழங்கிய மனுவின் விபரம் வருமாறு:-

ஏரி குளங்களில் தூர்வாரும் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் வண்டல்மண் இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு விவசாயிகளின் வரலாற்றில் போற்றப்படவேண்டிய திட்டமாகும். இந்த திட்டத்தினை ஆண்டுதோறும் செயல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும்.

தள்ளுபடி செய்ய...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இணைங்க சிறு விவசாயிகளின் முழுக்கடனையும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய தாங்கள் இதர விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மரபணு மாற்றப்பட்ட விதை பயிர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்தார். அதே போன்று தாங்களும் தமிழகத்தில் மரபணு மாற்ற விதை பயிர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

வறட்சி நிவாரணம்...

விவசாய விளை நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எரிவாயு, கெயில் குழாய் பதிப்பு, மின்சார டவர் லைன் அமைப்பு போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வறட்சி நிவாரணம் பயிர்க்காப்பீட்டு தொகை மற்றும் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் தங்களது மனுவில் வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து