முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை நீதிபதிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தது தவறு காங்கிரஸ் மீது மம்தா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்தது தவறு என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அளித்தன. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய வெங்கய்ய நாயுடு, ‘இது தலைமை நீதிபதியி்ன் மாண்பை குலைக்கும் செயலாகும்’ என்று கூறி கடந்த திங்கட்கிழமை நோட்டீசை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மம்தா கூறியபோது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்தது தவறு. நோட்டீஸ் கொடுக்க வேண்டாம் என்று சோனியா காந்தியிடமும் ராகுலிடமும் கூறினேன். நோட்டீசை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து