முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 1-ம்தேதி முதல் 9-ம் தேதி வரை கர்நாடகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது மோடியை 15 முதல் 20 கூட்டங்களில் பேச வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூருவில் குடியேறி, தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். இதேபோல பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா 3 கட்ட மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முடித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் 5-க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுவரும் கருத்து கணிப்புகளிலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலை இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் பாஜக மேலிடம் பிரதமர் நரேந்திர மோடியை பிரச்சாரத்தில் களமிறக்க முடிவெடுத்துள்ளது. வரும் 27-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மோடியின் பிரச்சார பயணத் திட்டத்தை அமித் ஷாவும், எடியூரப்பாவும் வகுத்து வருகின்றனர். அதன்படி வருகிற மே 1-ம் தேதி கர்நாடகாவில் உடுப்பியில் நடக்கும் பொதுக்கூட்டத்தின் மூலம் மோடி தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார். மே 9 -ம் தேதி வரை 5 முதல் 7 நாட்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்கிறார்.

ஒரு நாளைக்கு 3 மாவட்டங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 15 முதல் 20 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் மோடி அலையை உருவாக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. அதனால், மோடியின் பேச்சு தேர்தல் களத்தில் ஆதரவு அலையை ஏற்படுத்துமா? அவரது பிரச்சார வியூகம் வெற்றியை கொடுக்குமா? என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து