முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவையில்லை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில் இது ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வே்ண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
உங்களை போன்று எனக்கும் அந்த செய்தி தற்போது தான் வந்திருக்கிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்த்து விட்டுதான் கருத்து கூற முடியும், தீர்ப்பு நகலை பார்க்காமல் எந்த கருத்தையும் கூற முடியாது. உயர்நீதிமன்றம் மத்திய புலனாய்வு பிரிவுக்கு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த தீர்ப்பில் வேறு என்னென்ன கூறப்பட்டிருக்கிறது என்று படித்து பார்த்த பின்பு தான் கூற முடியும்.

ஆரம்பக்கட்டம்
அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தான் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. அவர்கள் விசாரணை நடத்திய பின்னர் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விகள் எழும். சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஆரம்பக்கட்டம். விசாரணைக்கு பின்னர் தான் ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்விகள் எழும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். மேலும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வீர்களா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, தீர்ப்பின் நகலை பார்த்து விட்டு தான் அரசின் நிலை குறித்து தெளிவுப்படுத்த முடியும் என்றார் ஜெயகுமார்.

கடைதெருவுக்கு...
இதைத்தொடர்ந்து சசிகலா உறவினர்கள் தினகரன் - திவாகரன் மோதல் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், கத்திரிக்காய் முளைத்து கடைத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்வார்கள் அதுபோல் தினகரன் - திவாகரன் மோதல் கடைத்தெருவரை வந்து விட்டது. ஜெயலலிதா அந்த குடும்பத்தை ஏற்கவில்லை என்று நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம். தினகரனை வீட்டுப்பக்கமும் வரக்கூடாது. பாராளுமன்றத்திற்கும் போகக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்தார். அதனால் தினகரன் 12 வருடத்திற்கும் மேலாக போயஸ்கார்டன் பக்கமே போகவில்லை. இதை நாங்கள் சொன்னபோது தினகரன் மறுத்தார். அவரை சார்ந்தோரும் மறுப்பு தெரிவித்தனர்.

ஒப்புதல் வாக்குமூலம்
ஆனால் தினகரன் நேற்று ஆத்திரத்தில் உளறியிருக்கிறார். ஜெயலலிதாவே விலக்கி வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். ஜெயலலிதாவால் தினகரன் நிராகரிக்கப்பட்டவர் என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சசிகலா குடும்பத்தை சார்ந்தவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே ஒரு முடிவை மேற்கொண்டு நாங்கள் தெளிவாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போது கட்சியும் ஆட்சியும் மிகச்சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் சசிகலா குடும்பத்தை சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து