முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேல் ரத்னா விருதுக்கு கோலி பெயர் பரிந்துரை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் : கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்து உள்ளது.

205 ரன்கள்...

கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது கிரிமினல்தனமானது என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி சொன்னார். ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி, 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் டோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ராயுடு, 53 பந்துகளில் 82 ரன்களும் டோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர்.

கிரிமினல் தனமானது

இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில், டாப்பில் இருக்கிறது. போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, இந்தப் போட்டியில் பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் பந்துவீசிய முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது கிரிமினல் தனமானது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 72 ரன்களுக்கு 4 விக்கெட்டை எதிரணி இழந்த போதும் அந்த அணியை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை. 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் வெற்றிபெறவில்லை என்றால் கஷ்டம். இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிக்கிறேன். அவர்களுக்கு போதுமான நம்பிக்கையை அளித்து செயல்படுத்த வைக்க வேண்டும்.

சிறந்த ஆட்டக்காரர்

இந்த பிட்ச் நன்றாக இருந்தது. சுழல் பந்து இந்தப் பிட்சில் நன்றாக எடுபட்டது. இரண்டு அணியிலுமே சில சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது. அதனால்தான் 200 ரன்கள் வரை எடுக்க முடிந்தது. ராயுடு கடந்த 15 வருடங்களாக விளையாடி வருகிறார். அவர் இளம் வீரர் இல்லை என்றாலும் சிறந்த ஆட்டக்காரர். இந்திய அணிக்கும் அவர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. டோனி உண்மையிலேயே அசத்தினார். இந்த ஐ.பி.எல்-லில் அவர் விளாசும் விதம் அருமையாக இருக்கிறது. ஆனால், எங்களுக்கு எதிராக அவர் அடித்ததைத்தான் பார்க்க முடியவில்லை  என்றார்.

ரூ.12 லட்சம்  அபராதம்

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிராக  மெதுவாக ஓவர் வீசியதாக  வீராட் கோலிக்கு ரூ.12 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எல்  வெளியிட்டு உள்ள அறிக்கையில் ஐ.பி.எல் விதிமுறைகளின் கீழ் நடப்பு போட்டியில்  முதல் குற்றவாளி என்பதால்  மெதுவாக ஓவர் போட்டதாக  கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை  பிசிசிஐ. பரிந்துரைத்துள்ளது. வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கர் பெயர் பரிந்துரை செய்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து