முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கனி காட்டுத்தீ விபத்தின் போது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

 தேனி,- தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,   குரங்கனி காட்டுத்தீ விபத்தின் போது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 240 காவல் துறையைச் சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை  வழங்கினார்.
 தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கொட்டக்குடி காப்புவனம் குரங்கனி பகுதியில் கடந்த 11.03.2018 அன்று எதிர்பாரத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தின் போது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்     அமைச்சர் பெருமக்கள் கண்காணிப்பில்  மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சிறப்பான முறையில் மீட்பு பணியில் ஈடுபட்ட 1 ஆய்வாளர், 4 சார்பு ஆய்வாளர்கள், 41 ஆயதப்படை தலைமைக்காவலர் முதல் காவலர்கள், 12 நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள், 182 பயிற்சி காவலர்கள் என மொத்தம் 240 காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசும்போது தெரிவிக்கையில்,
 எதிர்பாரத விதமாக ஏற்பட்ட குரங்கனி காட்டுத்தீ விபத்தின் போது, மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர்களின் மன திடம், மன வலிமை, மனிதாபிமானம் பாராட்டுகுரிய வகையில் அமைந்தது. முன்பின் அறியாத காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் நாள் முழுவதும் எந்தவித எதிர்பார்புமின்றி தங்களது பணியினை கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்றிவுள்ளீர்கள். உங்களது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினை ஒரு பாடமாக கொண்டு எதிர்வரும் காலங்களில் தங்களது பணியினை சிறப்புற பணியாற்றி, பொதுமக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்துள்ளார்.
 இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  .வீ.பாஸ்கரன்,   மாவட்ட துணை காவல் காண்காணிப்பாளர் (ஆயுதப்படை)  .ஜெயராமன்  தலைமையிடத்து வட்டாட்சியர்  .ஜஸ்டின் சாந்தப்பா அவர்கள், ஆய்வாளர்கள்  சீனிவாசன் , பரிமளாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து