முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டிவிட்டு ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கின்றார்கள் - எதிர்க்கட்சியினர் மீது முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

திருச்சி : இன்றைக்கு வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏதோ ஒரு போராட்டத்தை தூண்டிவிட்டு இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கின்றார்கள் என்று திருச்சியில் கழக அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக நேற்று திருச்சி மாநகருக்கு வந்திருந்தார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

அம்மாவின் கோட்டை...

அம்மாவின் கோட்டை, திருச்சி மாநகர மாவட்டம் என்பதை பெருமையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.  எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அந்த சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி அம்மா அவர்களுடைய கோட்டை என்று நிரூபிக்கின்ற மாவட்டம் திருச்சி மாவட்டம். இன்றைக்கு எத்தனையோ பேர், இந்தக் கட்சியை உடைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தவிடுபொடியாகி இங்கே நான் வரும்வழியெல்லாம் எழுச்சியோடு கூடியிருக்கின்ற அனைவரையும் பார்க்கும்பொழுது, இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அந்தத் தேர்தல் அத்தனை தேர்தலிலும் வெற்றி பெறுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை உறுதி செய்திருக்கின்றீர்கள்.

தினமும் போராட்டத்தை...

அம்மா மறைவுக்குப் பிறகு இந்தக் கட்சியை உடைத்து விடலாம், இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடி கொடுக்கின்ற விதத்திலே, மிகத் திரளாக இங்கே கூடியிருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்திலே நன்றி தெரிவித்து, அம்மா விட்டுச் சென்ற பணியினை சிறப்பான வகையிலே நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அந்த சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி, மக்களுக்கு என்ன திட்டங்கள் வேண்டுமோ, அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏதோ ஒரு போராட்டத்தை தூண்டிவிட்டு இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கின்றார்கள். இங்கே இருக்கின்ற பொதுமக்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அத்தனைபேரும் ஒருமித்த கருத்தோடு கழகத்திற்கு பக்கபலமாக இருக்கின்ற காரணத்தாலே, எத்தனை போராட்டங்களை அறிவித்தாலும், அத்தனையும் சாதிக்கக்கூடிய திறமை வாய்ந்த இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

உண்மையாக குரல்...

இன்றைக்கு காவிரி  பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினையாகட்டும், பாலாறு பிரச்சினையாகட்டும், எந்த பிரச்சினையானாலும் அம்மா வழியிலே நின்று வெற்றி பெறுவது உறுதி, உறுதி. காவிரி பிரச்சினைக்கு யார் யாரோ குரல் கொடுக்கின்றார்கள், உண்மையாக குரல் கொடுத்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.1986-லே முதன்முதலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்.  அம்மா , புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் நின்று சட்டப் போராட்டம் நடத்தி, நல்ல தீர்ப்பை நாம் பெறுவோம், வெற்றி பெறுவோம் என்று இந்த நேரத்திலே தெரிவித்து, சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும், இந்த மாவட்ட கட்சி அலுவலகம் மக்கள் சேவையை பூர்த்தி செய்யும், நிர்வாகிகளின் தேவையை பூர்த்தி செய்யும். கழகத் தொண்டர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த அலுவலகம் பயன்பெறும் என்று கூறி, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து