யெஸ் வங்கி நிகர லாபம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      வர்த்தகம்
yes bank

முக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.1,179 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.914 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 27.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.5,606 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.7,163 கோடியாக இருக்கிறது.

வங்கியின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றான நிகர வட்டி வரம்பு 3.4 சதவீதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 26.7 சதவீதம் உயர்ந்து ரூ.4,233 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,339 கோடியாக இருந்தது. மொத்த வருமானமும் ரூ.20,642 கோடியில் இருந்து ரூ.25,561 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து