முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டிருந்த விவசாய கண்காட்சி

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில், மாவட்ட ஆட்சியர்; அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.    கூட்டத்தில்  வேளாண்மை இணை இயக்குநர், விருதுநகர்    மானாவாரி நிலங்களின் மேம்பாட்டிற்காக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைத் திட்டம் நடப்பு ஆண்டில் 10 வட்டாரங்களில் 16 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். வேளாண் துறையின் மூலம் நுண்ணீர்  பாசனத்திட்டம்  நடப்பு ஆண்டில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் எனவும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி முன்னுரிமை பதிவேடுகளில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார். கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில்  விருதுநகர் மாவட்டத்தில் 48 வேளாண் உற்பத்திக்குழுக்களுக்கு 2.6 கோடி மதிப்புடைய  பண்ணைய இயந்திரங்கள் வழங்கப்பட்டன எனவும் நடப்பு ஆண்டில் கூடுதலாக 38 வேளாண்மை உற்பத்திக் குழுக்கள் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
  உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் .முத்துலெட்சுமி   உழவன் செயலி பற்றிய விளக்கவுரை வழங்கப்பட்டது. இச்செயலியின் மூலம் உள்ள ஒன்பது வகையான சேவைகளான  வேளாண் மானியத் திட்டங்கள் பற்றிய விபரம், பயனாளிகள் முன்பதிவு, பயிர்க்காப்பீடு பற்றிய விபரம்,  பண்ணை இயந்திரங்கள் வாடகை சேவை மையம், விளைபொருட்களின் சந்தை நிலை விபரம், வானிலை அறிக்கை விபரம், உரம்  மற்றும் விதை இருப்பு விபரம், வேளாண் விரிவாக்க பணியாளர்கள் விபரம் போன்றவற்றை விவசாயிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் வேளாண் திட்ட விபரங்களை விவசாயிகள் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உழவன் செயலியை அனைத்து விவசாய பெருமக்களும் பதவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
 
 பாரதப்பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காப்பீடு தொகை வழங்கப்படுவதில் உள்ள குறைகளை இனிவரும் காலங்களில் தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விவசாயிகளும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அடங்கலை அந்தந்த  கிராம நிர்வாக அலுவலகங்களில் சரிபார்த்து சரியான அடங்கலை பயிர் காப்பீடு செய்யும்பொழுது சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.
 முன்னதாக  விருதுநகர் தோட்டக்கலை துறையின்  மூலம் அமைக்கப்பட்டிருந்த விவசாய கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டார்கள்.
 
   இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர்  ஆனந்தகுமார்,  உட்பட பல துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து