முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சிப்புளியில் கைதான விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் கோர்ட்டில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் கடந்த 2015-ம் ஆண்டு கைதான விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேர் வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை 20-ந் தேதி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களின் காரை சோதனையிட்டபோது சயனைடு குப்பிகள், சயனைடு விசம், ஜி.பி.எஸ்.கருவிகள், பணம் முதலியவை இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை விசாரணை செய்தபோது இலங்கை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும், இலங்கை யாழ்ப்பானம் கிருஷ்ணகுமார்(44), உச்சிப்புளி சசிக்குமார்(48), நாகாச்சி ராஜேந்திரன்(39) என்பது தெரியவந்தது.இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இலங்கைக்கு சென்று விடுதலைப்புலிகள் இயக்கத்தினை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
     இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணைக்காக நேற்று 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம்விசாரணை நடத்திய நீதிபதி கயல்விழி இன்று(28-ந்தேதி) தீர்ப்பு வழங்குவதாக கூறி வழக்கினை ஒத்திவைத்தார். இதனால் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து