முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கோப்பை தடகள போட்டி கோவை - சென்னை அணிகள் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை தடகள போட்டியின் ஆண்கள் பிரிவில் கோவை அணியும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும் முதலிடம் பிடித்துள்ளன.

தடகள விளையாட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை “முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள்” நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்டம் 25 புள்ளிகளை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பையும், திருநெல்வேலி மாவட்டம் 10 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் பெற்றன.

20 புள்ளிகளுடன்...
பெண்கள் பிரிவில் சென்னை மாவட்டம் 20 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பையும், ஈரோடு மாவட்டம் 11 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் பெற்று கோப்பைகளை வென்றனர். முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பெற்ற 20 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பெற்ற 20 பேருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பெற்ற 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து