முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்ட்ரு ரஸலும் மனிதர்தானே தினேஷ் கார்த்திக் பேட்டி!

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஐ.பி.எல் தொடரின் 26-வது லீக் போட்டியில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின.  டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றிபெற்றது. கொல்கத்தா அணியில் அதிகப்பட்சமாக அண்ட்ரூ ரஸல் 44 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றது மகிழ்ச்சி
பின்னர் அவர் கூறும்போது, ‘கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலே வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் போட்டியில் நான் மட்டும் அல்ல, அனைத்து வீரர்களும் சிறப்பான பங்களிப்பை செய்தார்கள். டாஸ் வெல்லாமல் இருந்ததும் மகிழ்ச்சிதான். அதை நான் வென்றிருந்தாலும் பீல்டிங்கைதான் தேர்தெடுத்திருப்பேன். பிருத்வி ஷா சிறப்பாக பேட்டிங் செய்தார். காலின் முன்றோவும் அருமையாக விளையாடினார். பந்துவீச்சாளர் பிளங்கட், 16 அல்லது 17 வது ஓவரில் நான் பந்துவீசுகிறேன் என்று கேட்டு வாங்கினார். அவரை போன்ற சீனியரை பார்ப்பது நன்றாக இருக்கிறது’ என்றார்.

விளையாடவில்லை
கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ’இந்த டார்க்கெட் அதிகம்தான். அவர்கள் எங்களை விட சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். எங்கள் அணியில், ரஸல் மைதானத்தில் இருக்கும்வரை எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவரும் மனிதர்தானே. அவருக்கு நாங்கள் யாராவது கைகொடுத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. எங்கள் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. இதெல்லாம்தான் வெற்றி எங்களை விட்டுப் போக காரணம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து