முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே ஜல்லிகட்டு காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்து£ர் ஊராட்சி சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி நேற்று சங்கரன்பாறையில் ஜல்லிகட்டு நடந்தது.
          இதையட்டி சங்கரன்பாறையில் பாலமுருகன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் ஜல்லிகட்டு நடந்தது. இந்த ஜல்லிகட்டில் நத்தம், பாலப்பட்டி, சிறுகுடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்தும் 562 காளைகள் கொண்டு வரப்பட்டது. இதில் கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குநர் சுப்பையா பாண்டியன் மேற்பார்வையில் செந்துறை கால்நடை டாக்டர் ஹரிஹரன் காளைகளுக்கான தகுதி பற்றிய சோதனை மேற்கொண்டதில் 486 காளைகள் தகுதியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜல்லிகட்டில் பங்கேற்றன. இதில் மாடுபிடி வீரர்கள் 275 பேர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர். இந்த ஜல்லிகட்டை காலை சுமார் 8 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர்  ஜீவா தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிகட்டில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம்,வெள்ளி காசுகள், சைக்கிள், வயர்கட்டில், பீரோ போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காயம்பட்ட வீரர்களுக்கு உலுப்பகுடி வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா மேற்பார்வையில் டாக்டர்கள் விக்னேஷ், சந்தியாராம் உள்ளிட்ட 16 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். காயம்பட்ட 18வீரர்களில்  3 பேர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிகட்டு விழாவில் நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம்,  தாசில்தார் ஜான் பாஸ்டீன் டல்லஸ் , அதிமுக நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், சேத்து£ர் கிராம நிர்வாக அலுவலர் கருப்பணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் மேற்பார்வையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து