முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலா புரம் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனுக்கள் கிழிப்பு. மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைப்பு .

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி .-       ஆண்டிபட்டி ஒன்றியத்தில் எம்.சுப்புலாபுரம் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது சிலர் வேட்பு மனுக்களை கிழித்து எறிந்ததால் தேர்தல் அலுவலர் மறு தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைத்தார்.
         தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஆண்டிபட்டி, கன்னியப்ப பிள்ளை பட்டி, கதிர். நரசிங்கபுரம், எம்.சுப்புலாபுரம், அனுப்பபட்டி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நடந்தது. இதில் அதிமுக, அ ம முக, திமுக கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். 7சங்கங்களுக்கு 400 க்கும் மேற்பட்டவர்கள் மனு செய்தனர்.வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் பெறப்பட்டது. இருப்பினும் வேட்பாளர்கள் காலை 9 மணி முதலே அந்தந்த அலுவலக வாசலில் விண்ணப்பங்களை பெற காத்துக் கிடந்தனர்.
        எம்.சுப்புலாபுரம் எம்.டி.தனி 102 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்க்காக 11 இயக்குனர்கள் தேர்வு செய்வதற்காக வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிமுக சார்பில் 11 பேர், திமுக சார்பில் 16 பேர்,அமமுக சார்பில் 23 பேர், மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்த 37 பேர் மனுச் செய்து இருந்தனர்.
         இந்நிலையில் மதியம் தேர்தல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தது போல் நுழைந்த சிலர் தேர்தல் அலுவலர் இளங்கோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேஜையில் பெறப்பட்டு இருந்த  வேட்பு மனுக்களை கிழித்து எறிந்தனர். இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் அலுவலர் இளங்கோ வேட்பு மனு தாக்கலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
         தேர்தல் அலுவலரின் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     இது குறித்து சங்க உறுப்பினர்கள் கூறியதாவது,
     பாலக்கோம்பை, ராமலிங்கபுரம் கூட்டுறவு தேர்தலை தொடர்ந்து இங்கும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது குற்ற செயல்கள் மற்றும் ரகளையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே தேர்தல் ஒத்திவைப்பு தொடர்கதையாகி அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. என்று விரக்தியிடன் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து