முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      தேனி
Image Unavailable

தேனி, -  தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்துறை மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை இணைந்து தேசிய குழந்தைகள் நல்வாழ்வுத்திட்டத்தின் கீழ்   நடத்திய குழந்தைகளுக்கான இருதயம், மூளை நரம்பியல் மற்றும் சிறுநீரகநோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், 
தமிழக அரசு மனித நேயத்துடன் மருத்துவ சேவையினை அளித்து மக்களின் நலன் காத்திட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.1 இலட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 இலட்சம் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் வரையும், பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1,016 சிகிச்சை முறைகளுக்கும் 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 நமது மாவட்டத்தில் இருதய நோய் மற்றும் மூளை நரம்பியல் மற்றும் சிறுநீரகநோய் பாதிப்புகள் ஏற்ப்பட்ட குழந்தைகளை 8 வட்டார மருத்துவமனைகள் மூலம் கண்டறியப்பட்டு, 204 குழந்தைகளுக்கு கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 60 குழந்தைகளுடன் மேலும் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை கண்டறிவதற்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் 16 அரசு மருத்துவர்கள், 1 இருதய நோய் மருத்துவர், 1 மூளை நரம்பியல் மருத்துவர் மற்றும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, குழுந்தைகளுக்கான நோய் பாதிப்புகள் குறித்து கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் 18 வயதிற்குள்ள குழந்தைகள் பரிசோதனை செய்து பயன்பெறலாம். இதனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் எவ்வித செலவு இல்லாமல் முழுவதும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
இம்முகாமில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம்  , வட்டார மருத்துவ அலுவலர் மரு.மணிகண்டன்  , ஒருங்கிணைப்பாளர் மரு.மனோஜ் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து