முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 2 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம சுவராஜ் அபியான் எனப்படும் கிராம சுயாட்சி  இயக்கம் திட்டத்தின் கீழ் அறிவுருத்தியுள்ளபடி, வேளாண்மைத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்நடைபெற்றது. மத்திய வழிகாட்டுதல் அலுவலர் (ம) மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் இணைச் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் திட்ட விளக்கவுரையாற்றினார். விழாவில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் இந்திய அரசு அறிவித்துள்ளபடி, 2022ல், முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள்;  தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
 அதனடிப்படையில்; மாவட்டத்தில் 31.01.2018 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, 67,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  2016-2017ஆம் நிதியாண்டில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம்; ரூ.514.26  கோடி மதிப்பில் பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும், ரூ.148 கோடி மதிப்பில் வறட்சி நிவாரண உதவித்தொகையும்  வழங்கப்பட்டுள்ளது.  மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் நிலைகளை ஆழப்படுத்திட மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்திட  அனுமதி வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  மேலும் கிராம சுவராஜ் திட்டத்தின்படி அறிவுறுத்தியுள்ளபடி, வேளாண்மைத் துறையின் மூலம்  விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த பணிமனையின் நோக்கம் விவசாயிகளின் வருவாயினை இரு மடங்காக்குவது ஆகும்.  இதற்காக பாரத பிரதமர் அவர்களால்ஏழு அம்ச திட்டமான ஒவ்வொரு துளிக்கும் அதிக அளவில் பயிர் மகசூல்  என்ற நோக்கத்துடன் பாசன நீருக்கு  முக்கியத்துவம்; அளிக்க போதுமான நிதி ஒதுக்கீடு  செய்தல், மண்ணின் வளத்தினை அடிப்படையாக கொண்டு தரமான விதை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அளிப்பது, அறுவடைக்குப்பின் பயிர் சேதத்தினை தவிர்க்க சேமிப்பு கிடங்கு மற்றும் குளிர்பதன கிடங்குகளில்   பெரிய அளவில் முதலீடு செய்தல், உணவு பதப்படுத்தலின் மூலம் மதிப்பு கூட்டுவதை ஊக்குவித்தல், தேசிய வேளாண் விற்பனைத் திட்டம் வசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க செய்தல் , புதிய பயிர் ஈட்டுறுதி திட்டத்தினை செயல்படுத்துதல், விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளான கோழி வளர்ப்பு, தேனி வளர்ப்பு , மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகியவை  வகுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதிக மகசூல் ஈட்டிய  11 விவசாயிகளுக்கு  பரிசு மற்றும் சான்றிதழ்களும்,   10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளும்,   மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் 1 பயனாளிக்கு  சலவைப் பெட்டியும்,  மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பாக  3 பயனாளிகளுக்கு  தையல் இயந்திரங்களும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பே.இந்திராகாந்தி, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.டி.மோகன், கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ந.சாத்தையா, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.டி.ஏ.விஜயலிங்கம், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சி.இராஜமாணிக்கம், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) ஜே.இராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் வி.அப்துல்காதர் ஜெய்லானி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.இராஜா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து