முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைதான தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய டோனி

வியாழக்கிழமை, 3 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். தொடரின் இந்த சீசன் டோனிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. டோனி தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். களத்தில் பேட்டிங் மற்றும் கேப்டன் ஷிப்பில் கலக்கும் டோனி, தனது மகளுடன் இடையே கொஞ்சி விளையாடுகிறார். டோனி மகள் ஜிவாவின் வீடியோவுக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடிய டோனியை அவரது ரசிகர்கள் அன்பு மழையால் பாராட்டி வருகின்றனர். சேப்பாக்கம் மற்றும் புனே மைதனாங்களின் தொழிலாளர்களுடன் டோனி மே தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அந்தப் பக்கத்தில், டோனியின் ரசிகர்கள், ‘ரியல் ஹீரோ’,‘சூப்பர் மனிதர்’ என பாராட்டுக்களை எழுதிக் குவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து