Idhayam Matrimony

டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது - ராஜஸ்தான் கேப்டன் ரகானே வருத்தம்

வியாழக்கிழமை, 3 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 ரன்னில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

மழையால் பாதிப்பு

ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ரிசப்பண்ட் 29 பந்தில் 69 ரன்னும் (7 பவுண்ரி, 5 சிக்சர்) கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் 35 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), பிரித்விஷா 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

4 ரன்னில் வெற்றி

மழையால் ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது. பட்லர் 26 பந்தில் 67 ரன்னும் (4 பவுண்டரி, 7 சிக்சர்) ஆர்சிஷார்ட் 25 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். டெல்லி அணிக்கு 3-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி கடைசி இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது. ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

அபாரமாக இருந்தது

இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

மையிலேயே இது முக்கியத்துவம் பெற்ற வெற்றியாகும். இந்த நேரத்தில் பெற்ற வெற்றியில் மகிழ்ச்சியில் அடைகிறேன். ரி‌ஷப்பண்ட் பிரித்விஷா பேட்டிங் அபாரமாக இருந்தது. அந்த ஆடுகளத்தில் பந்துவீசுவது பவுலர்களுக்கு சவாலானது. ஆனாலும் அவர்கள் கடைசி வரை போராடி சிறப்பாக வீசினர். இவ்வாறு அவர் கூறினார்.

மிகுந்த ஏமாற்றம்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரகானே கூறியதாவது:- இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பட்லரின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 12 ஓவரில் 151 ரன் என்பது கடினமானதே. எங்களது பந்துவீச்சு சரியில்லை. எங்களுக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து