முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தினை ஆணையாளர் அனீஷ் சேகர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 3 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 ஆனையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடற்ற ஏழைகளின் தங்கும் இல்லத்தினை ஆணையாளர்  அனீஷ் சேகர்,  திறந்து வைத்து பேசும்போது தெரிவித்ததாவது :
 மதுரை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்காகவும் சாலையோர வியாபாரிகளுக்காகவும் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்குவதற்காக பல இடங்களில் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. நாம் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரை காப்பது கடமையாக எண்ணி பாதுகாக்க வேண்டும். பெற்றோர்களை முதியோர் இல்லங்களிலும், ஏழைகள் தங்கும் இல்லங்களிலும் சேர்ப்பது பெருமையானது அல்ல. கடைசிகாலத்தில் பெற்றோர்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லங்களில் உள்ள முதியோர்கள் அவரவர் வீடுகளில் இருப்பது போன்று சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அங்கு இருக்கும் முதியோர்கள் இல்லங்களின் சுற்றியுள்ள காலி இடங்களில் தோட்டங்கள் அமைப்பது, மாடித் தோட்டங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனையூரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த இல்லத்தினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்றார்.
  மதுரை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்குவதற்காக மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே 8 நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது 9 வது இல்லம் ஆனையூரில் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும் 5 இடங்களில் இல்லங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
 இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர்  .சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர்  அரசு, உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், பெட்கிராப்ட் நிறுவனர்  .சுப்புராம், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல்,  பெட்கிராப்ட் நிறுவன பொது செயலாளர்  .அங்குராஜ், டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு கழகம் தலைவர்  .ஏ.புஷ்பம், உதவி செயற்பொறியாளர்  .முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர்  .விஜயகுமார், உதவிப்பொறியாளர்  மணியன், சுகாதார ஆய்வாளர்  ராஜாமணிகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து