திருமண விஷயத்தில் சல்மான்கான், விஷால், ஆரியா ஆகியோர் என் குரு கவுதம் கார்த்திக் பேட்டி

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      சினிமா
Gautam Karthik

எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்ய எண்ணம் இல்லை திருமணம் விஷயத்தில் சல்மான்கான் , விஷால், ஆர்யா, ஆகியோர் என குரு ஆவார்கள் கூறினார்.

இது தொடர்பாக கவுதம் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஹரஹர மகாதேவகி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ். பி.ஜெயகுமார் இயக்கத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்து இருக்கிறார். வரிசையாக இந்த மாதிரிபடங்களில் நடித்தால் உங்கள் தகுதி என்னவாகும் ? என்று நிருபர்கள் கேட்டதற்கு அதற்கு அவர் கூறிய பதில் பதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானர். ஹரஹர மகாதேவகி படத்துக்கு சூடாக விமர்சனங்கள் வந்தாலும் அந்த படத்திற்கு இளைஞர்கள் உட்பட பலர் கண்டுகளித்தனர். வசூல் ரிதியாக பெரியப்வெற்றி என்று சொல்லாம். மீண்டும் இதே இயக்குனருடன் இணைந்து இருக்கிறேன். பேய் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நான், காமெடியன் சாரா, நாயகிகள் வைபவி சாண்டியா, யாஷிகா அனந்த் ஆகியோர் செல்கிறோம். பேய்க்கு பிடிக்காத விஷயத்தை செய்கிறோம். இதனால் கோபமான அந்த பேய் என்னசெய்கிறது .என்பது தான் கதை. பேயாக சந்திரிகா ரவி நடித்துள்ளார். செக்ஸ் திரில்லர் என்ற கோணத்தில் கதை நகர்கிறது. இது நீங்கள் நினைக்கிற மாதிரியான படம் கிடையாது படத்தின் டிரைலர், டீசர் பார்ர்து விட்டு பலர் பாராட்டி கொண்டிருகிறார்கள் சிலர் திட்டுகிறார்கள் .சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சாரில் முன்று பெண் உறுப்பினர்கள் பார்த்து விட்டு தான் இந்த சான்றிதழை கொடுத்தார்கள் என்றார் . இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு  இல்லை திருமண விஷயத்தில் சல்மான்கான் , விஷால், ஆர்யா ஆகியோரை என் குருவாக போற்றி வருகிறேன் . என்றார் கவுதம் கார்த்திக்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து