அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு ரூ.12.7 கோடி ஜாக்பாட் பரிசு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
Abu Dhabi lottery 2018 05 04

குவைத், குவைத்தில் பணிபுரியும் அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு நாடுகளின் ஊடகங்கள் தரப்பில், "50 வயதான அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு 12.7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. அவர் குவைத்தில் கம்பெனி ஒன்றில் நிர்வாக உதவியாளராக இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த லாட்டரி குலுக்கலில் அனில் உட்பட ஏழு இந்தியர்களுக்கு பரிசு கிடைத்துள்ளது. இதில் அனிலை தவிர மற்ற இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 1.8 கோடி ரூபாய் பரிசுத் தொகையை பெற உள்ளனர். வங்கதேசம், மோராக்காவை சேர்ந்தவர்களுக்கும் பரிசு கிடைத்துள்ளது.

லாட்டரியில் பரிசுத் தொகை கிடைத்தது குறித்து அனில் வர்கிஸின் கூறும்போது, "நான் அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை ஆன்லைனில் தேர்வு செய்யும்போது எனது மகனின் பிறந்த நாளான 11/97 ஒத்து போவது போல் வாங்கினேன். இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. நான் சமீப காலமாக பெரும் துயரத்தை சந்தித்தேன். ஆனால் தற்போது நீங்கிவிட்டது. இந்த பணத்தை என்ன செய்வது என்று முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து