முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளர்களுக்கு ட்விட்டர் முக்கிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் ட்விட்டர். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் இந்த நிறுவனனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இண்டேனல் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சிலரது பாஸ்வேர்டுகள் சேமிக்கப்பட்டதாகவும், இது சில ஊழியர்களுக்கு தெரிந்து இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளது.

இதனால், பயனாளர்கள் 330 மில்லியன் பேரும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு ட்விட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், நடைபெற்ற விசாரணையில், பாஸ்வேர்டுகளை திருடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் ட்விட்டர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து