ஆதார் திட்டத்தால் பாதிப்பில்லை: பில் கேட்ஸ்

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
aadhaar-driving-license 2017 09 15

இந்தியாவின் ஆதார் தொழில்நுட்பம் தனிநபர் சுதந்திரத்துக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை மற்ற நாடுகளுக்கும் கொண்டுசெல்வதற்கு பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழியாக உலக வங்கிக்கு உதவுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆதார் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேணி ஆதாரை உலக நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக உலக வங்கிக்கு ஆலோசனைகளும், உதவிகளும் வழங்குவார் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து