முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் கத்தரி வெயிலியின் தாக்கத்தை விரட்டியடித்த கோடைமழை_மக்கள் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் கத்தரி வெயிலின் தாக்கத்தை கோடைமழை விரட்டியடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானல் உட்பட மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் திண்டுக்கல் நகரில் மட்டும் மழை ஏமாற்றி வந்தது. இந்நிலையில் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் கோடைமழை பெய்தது. திண்டுக்கல்லில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. கனமழை காரணமாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடையின் வெப்பத்தில் தவித்த மக்களையும், கத்தரி வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என்று சிரமத்தில் இருந்த மக்களையும் கோடைமழை குளிர்வித்தது. மேலும் கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக பழனி நகரில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடைகாலத்தில் குடி நீர் தட்டுப்பாடு அபாயம் இருக்காது என்று பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
நிலத்தடி  நீர்மட்டமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கோடை உழவுப்பணியையும் விவசாயிகள் மும்முரமாக தொடங்கியுள்ளனர். இந்த மழை மேலும் சில நாட்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பல அணைகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற  நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு
திண்டுக்கல் 49.8., கொடைக்கானல் 29.4, பழனி 20, ஒட்டன்சத்திரம் 26.2, நத்தம் 0.5, வேடசந்தூர் 24.3, புகையிலை ஆராய்ச்சி மையம் 22.6, காமாட்சிபுரம் 25.5, கொடைக்கானல் போட்கிளப் 25 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 147 மி.மீ. மழைப்பொழிவும், நேற்று வரை 222.30 மி.மீ மழைப்பொலிவும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 369 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து