முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் சாமநத்தம் கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை தெற்கு வட்டம், சாமநத்தம் கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  .கொ.வீர ராகவ ராவ், தலைமையில்   நடைபெற்றது.
 இந்த அம்மா திட்ட முகாமில் வருமானச்சான்றிதழ் வேண்டி 13 மனுக்களும், இருப்பிடச்சான்று வேண்டி 12 மனுக்களும், பட்டா மாறுதல் வேண்டி 1 மனுவும், ஓ.பி.சி சான்றிதழ் வேண்டி 1 மனுவும், இதர மனுக்கள் 1 என மொத்தம் 28 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்கள் ஏற்கப்பட்டது. 
 இம்முகாமில் 10 பயனாளிகளுக்கு தோராயப்பட்டாவிற்கான ஆணைகளும், 10 பயனாளிகளுக்கு வருமானம், இருப்பிடச்சான்றுகளும், 2 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், 2 நபர்களுக்கு சாதிச்சான்றுகளும், 1 ஒ.பி.சி சான்றிதழினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
 இம்முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.சித்ரா, மதுரை தெற்கு வட்டாட்சியர் திரு.சுந்தர முருகன், மதுரை தெற்கு வட்டாட்சியர் (ச.பா.தி)  கோபி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து