முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி? பெங்களூருடன் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புனே : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் போட்டியில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2-வது இடத்தில்...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி 9 ஆட்டத்தில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

பந்து வீச்சு, பீல்டிங்...

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் சுமாராகவே இருந்தது. அதை சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பேட்டிங்கில் வாட்சன், அம்பதி ராயுடு, ரெய்னா, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

5 போட்டியில் தோல்வி

ஏற்கனவே இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 205 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. ஆனால் சென்னை நம்பிக்கையுடன் களம் இறங்கும் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் 8 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது.

முக்கியமானது...

அந்த அணிக்கு மீதமுள்ள ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. அதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. கோலி, டிரில்லியர்ஸ், மெக்குல்லம், டி காக், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சாகல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இந்த போட்டில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து