பிளிப்கார்ட் பங்குகளை வாங்கும் வால்மார்ட்

சனிக்கிழமை, 5 மே 2018      வர்த்தகம்
flipkart

பிளிப்கார்ட் நிறுவன பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  முன்னதாக பிளிப்கார்ட் தளத்தின் 40% பங்குகளையும், பின் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 73% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 73% பங்குகளின் மதிப்பு 1600 கோடி அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் மே 3-ம் தேதி கையெழுத்தானதாகவும், இதற்கென வால்மார்ட் 1460 கோடி டாலர்களை செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிளிப்கார்ட் மதிப்பு 2000 கோடி டாலர்கள் என்ற நிலையில் வால்மார்ட் சார்பில் பிளிப்கார்ட் மதிப்பு 2200 கோடி என கணக்கிடப்பட்டு சுமார் 1600 கோடிகளை செலவிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து