ஃபேஸ்புக் தகவல் கசிவு குறித்த விசாரணை தொடரும்

சனிக்கிழமை, 5 மே 2018      வர்த்தகம்
Facebook 2018 01 18

பிரிட்டனைச் சேர்ந்த தகவல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8.7 கோடி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் தகவல்களை அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மூடப்பட்டாலும் அந்த நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் வழியாக மக்களின் விவரங்கள் கசிந்தது தொடர்பான இந்திய அரசின் விசாரணை தொடரும் என மூத்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து