முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழாவை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் விருது அனுப்ப முடிவு மத்திய அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஜனாதிபதியின் கையால், தேசிய விருதை பெற முடியவில்லை என்ற காரணத்திற்காக, விழாவை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் விருதுகளை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில், சமீபத்தில் நடந்தது. தேசிய விருது பெறும் அனைவருக்கும், ஜனாதிபதியின் கையால், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை, 11 பேருக்கு மட்டுமே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் ஆலோசனை செய்தனர். பின்னர், திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தனர். இது தொடர்பாக திரைப்பட விழா இயக்குனரகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், விழாவை புறக்கணித்தவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும், தபால் மூலம், அவர்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என, தகவல் ஒலிபரப்பு துறை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக விருதை பெற நேரில் வர முடியாமல் போனவர்களுக்கு தபால் மூலம் விருதை அனுப்பி வைப்பதை மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது. இந்த முறையும் அதையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து