முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம்,கூடலூர் பகுதிகளில் கோடை மழையால் நிலக்கடலை விதைப்பு பணி மும்முரம். விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- தேனி மாவட்டம் கம்பம், கூடலூரில் தற்பொழுது பெய்த கோடை மழை காரணமாக மானா வாரி நிலங்களில் நிலக்கடலை விதைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.ஆண்டு தோறும் சித்திரை மாத துவக்கத்தில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி துவங்கும்.இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கம்பம் கூடலூரில் கன மழை பெய்தது.இதனை தொடர்ந்து கம்பம் மெட்டு ரோடு,லோயர் கேம்ப்,கழுதை மேடு,தம்மணம்பட்டி,பெருமாள் கோவில் கம்பம் சிலுவை கோவில் ஆகிய  பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் உழவு செய்து நிலக்கடலை விதைப்பு பணிகளில் விவாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து இரவில் மழை பெய்வதால் இன்னும் ஓரு வாரத்திற்கு விதைப்பு பணிகள் நடைபெறும்.ஆடி மாதத்தில் அறுவடை நடக்கும் அது வரை அவ்வப் போது  சாரல் மழை பெய்வதால் இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி அமோகமாக இருக்கும் இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து