முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      விளையாட்டு
Image Unavailable

டோஹா: டோஹாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் இந்தியான் இளம் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து 4-வது இடத்தை பெற்றார்.

நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 2016-இல் புதிய சாதனையோடு ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டைமண்ட் லீக் போட்டியில் உலக சாம்பியன் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ஆண்ரிஸ் ஹாப்மேன் ஆகிய ஜாம்பவான்களுடன் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். அவர்கள் அனைவரும் 90 மீ தூரம் ஈட்டி எறிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆவர்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் சோப்ரா 87.43 தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்தார். ரோலர் தங்கத்தையும், வெட்டர் வெள்ளியையும், ஹாப்மேன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து