முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிம அறக்கட்டளை நிதி குறித்த கலந்துரையாடல் கூட்டம் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்துதல் குறித்த மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பாக மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்துதல் குறித்த மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்;டர் பேசியதாவது:- மத்திய அரசு பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ்  கனிமம் எடுப்பதனால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை கண்டறிந்து  அவற்றை சீர்செய்திடும் விதமாக அந்தந்த பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கனிம அறக்கட்டளை செயல்படுத்திட அறிவுறுத்தியுள்ளது.  அதன்படி தமிழ்நாடு அரசு  கனிம கட்டமைப்பு நிதி 19.05.2017 முதல் அரசாணை வெளியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 மாவட்ட கனிம அறக்கட்டளையானது மாவட்ட கலெக்டரை தலைவராகவும், கனிமம் சார்ந்த பிற அரசுத்துறை தலைமை அலுவலர்கள் உறுப்பினர்களாகவும் பங்கேற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி, 12.01.2015-க்கு முன்பு வழங்கப்பட்ட கனிம குத்தகைகளுக்கு சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் செலுத்தும் கனிம உரிமக் கட்டணத்தில் 30 சதவீதமும்,  12.01.2015க்கு பின்பு வழங்கப்பட்ட கனிம குத்தகைகளுக்கு சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் செலுத்தும் கனிம உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம் வசூலித்திடவும்,  இந்த நிதியின் மூலம் குவாரி உரிமம் வழங்கப்பட்ட பகுதிகளில் குவாரிப்பணியினால் பாதிப்படைந்த மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் திறன் வளர்ச்சி திட்டங்களுக்கும், நீர்ப்பாசன அபிவிருத்தி, எரிசக்தி அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகிய திட்டங்களுக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஏர்வாடி கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆழ்துளை கிணறு மற்றும் பேருந்து பயணிகள் நிழலகம் அமைக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட கனிம கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  எனவே இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன்,புவியியல் மற்றும் சுரங்கத்துறை  இணை இயக்குநர் (சென்னை) என்.அனந்தகோபாலன், மத்திய அரசு சிறப்பு திட்ட ஆலோசகர் பியூலா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர்கள் ஆ.லலிதா (ராமநாதபுரம், சிவகங்கை), கா.ரமேஸ் (புதுக்கோட்டை),பி.ஜோதி (திருவாரூர்  நாகப்பட்டிணம் தஞ்சாவூர்), சி.டி.அண்ணாதுரை (திருச்சி)   உள்பட  அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து