முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசம் முழுவதும் இனி ஒரே விலையில் கார்கள் !

திங்கட்கிழமை, 7 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

ஒரு தேசம், ஒரே விலை என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் ஒரே விலையில் கார்களை விற்க கார் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுவாக கார்கள் அறிமுகப்படுத்தும்போது டெல்லி விற்பனையக விலை, மும்பை விற்பனையக விலை, தமிழ்நாடு விற்பனையக விலை என ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ப விலையில் மாறுபாடு ஏற்படும். இதற்குக் காரணம் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் மாநில வரி விதிப்பைப் பொறுத்தே உள்ளூர் விற்பனையக விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான வரி விதிப்பு அமலில் உள்ளது. இதனால் கார்களின் விலையிலும் மிகப் பெருமளவு மாறுதல் இருப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு ஒரே தேசம், ஒரே விலை என்ற அடிப்படையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காரை எங்கு வாங்கினாலும் ஒரே விலை இருக்குமாறு உற்பத்தி நிறுவனங்கள் பார்த்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து