வீடுகளுக்கு டீசல்: ஹெச்பிசிஎல் திட்டம்

திங்கட்கிழமை, 7 மே 2018      வர்த்தகம்
hpcl home delivery diesel 2018 05 07

இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து வீடுகளுக்கு டீசல் வழங்கும் திட்டத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) தொடங்கி இருக்கிறது. மும்பையில் அறிமுகம் செய்யும் இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் ஷாப்பிங்க் மால் போன்ற அதிக டீசல் தேவைப்படும் இடங்களே இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பார்கள்.இதன் மூலம் நேரம், பணம், எரிபொருள் இழப்பு ஆகியவற்றை மிச்சப்படுத்தலாம் என ஹெச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து