அதிகரிக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்!

திங்கட்கிழமை, 7 மே 2018      வர்த்தகம்
500 fake notes(N)

இந்தியாவில் போதுமான அளவில் ரொக்கம் இருக்கிறது. ரூ.100,ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் தேவையான அளவுக்கு இருக்கின்றன. இருந்தாலும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, புதிய நோட்டுகளில் அதிக பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைந்திருக்கிறது. இருந்தாலும் மேலும் புதிய பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து