முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: குமாரசாமியுடன் அம்பரீஷ் சந்திப்பு

திங்கட்கிழமை, 7 மே 2018      இந்தியா
Image Unavailable

மைசூரு : காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் மஜத மாநில தலைவர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள அம்பரீஷ் குமாரசாமியை சந்தித்தது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த கன்னட நடிகர் அம்பரீஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸில் இணைந்து எம்பி ஆனார். கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அமைச்சரவையில் அம்பரீஷ் அக்கறை காட்டாமல் இருந்ததால் சித்தராமையா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் அம்பரீஷ் சித்தராமையாவுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசிவந்தார்.

இருப்பினும் அம்பரீஷூக்கு மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது. ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் அம்பரீஷ் திடீரென தலைமறைவானார். மனு தாக்கல் முடிந்தபிறகே வெளியே வந்து உடல்நிலை சரியில்லாததால் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் முடியாது’’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், அம்பரீஷ் நேற்று மஜத மாநில தலைவர் குமாரசாமியை சந்தித்து பேசினார். ஏற்கெனவே காங்கிரஸில் இருந்த ஒக்கலிகா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவுக்கு தாவியதால் மைசூரு மாகாணத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி சரியும் என கூறப்பட்டது. இப்போது ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்த அம்பரீஷூம் மஜதவுக்கு ஆதரவாக மாறியுள்ளதால் மைசூரு மாகாணத்தில் காங்கிரஸூக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து