முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் மே 19-ல் துவக்கம்

திங்கட்கிழமை, 7 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை மே 8-  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் மே 19-ல் துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் மாலை 6 மணியளவில் புறப்பட்டு புதுமண்டபம்  சென்று பக்தி உலாத்துதல் மற்றும் தீபாரதனை நடைபெறும். பின்னர் 4 சித்திரை வீதிகளில் உலா வந்து கோவில் சென்றடைகிறார் . 29ம் தேதி முதல் 31 தேதி வரை திருஞானசம்பந்தர் விழா நடைபெகிறது. 31ம் தேதி காலை அன்று திருஞானசம்பந்தர் நட்சத்திர தினத்தை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் 63 நாயன்மார்களுடன் எருந்தருளி 4 ஆவணி மூல வீதிகளில் வலம் வருகிறார். பின்னர் இரவு 8 மணியளவில் திருஞானசம்பந்தர் வெள்ளி கோரதத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது தங்க ரதம் இழுப்பது , உபயதாரர்கள் நடத்தும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோயில் இணை கமிஷனர் நடராஜன்

தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து