முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியினை நேரடியாக பார்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தமைகாக மாற்றுத்திறனாளிகள் மதுரை கலெக்டருக்கு நன்றி

திங்கட்கிழமை, 7 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, -  மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களிடமிருந்து 408 பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து 93 பயனாளிகளுக்கு ரூ.18,31,866 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு கோரி, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
 பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பததை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் நடந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் பாட ஆசிரியர்களுக்கு தலா ரூ.5000 என மொத்தம் ரூ.1,65,000 மதிப்பிலான ஊக்கத்தொகையையும், மதுரை தெற்கு வட்டத்தின் சார்பில் முதியோர் உதவித்தொகை 7 நபர்களுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை 2 நபர்களுக்கும், ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், மதுரை மேற்கு வட்டத்தின் சார்பில் 7 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் 2017-18ம் ஆண்டிற்கான சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு தலா ரூ.4075 மதிப்பிலான தையல் இயந்திரம் ரூ.40,750 மதிப்பிலும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.7,28,116 மதிப்பிலான முதிர்வுத்தொகையினையும்,
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) சார்பில் விபத்து மரணம் நிவாரணத்தொகை 6 நபர்களுக்கு ரூ.7,04,000 மதிப்பிலும், இயற்கை மரண நிவாரண உதவித்தொகை 10 நபர்களுக்கும், 29 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை என மொத்தம் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
சித்திரைப்பெருவிழாவின் போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியினை மாற்றுத்திறனாளிகள் நேரடியாக பார்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, மாற்றுத்திறனாளிகள் பலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இதனையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு வருடம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இதுபோன்ற வசதிகள் தொடர்ந்து செய்து தரப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.
      இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  .ரெ.குணாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)  .ராஜசேகரன்,   உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து