முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன் சென்னை இளைஞர் குடும்பத்தாரிடம் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி உருக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் :  அவமானத்தால் தனது தலை தொங்கிப் போயுள்ளதாக சென்னை வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காஷ்மீர் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த கல்வீச்சில் சிக்கி, சென்னையை சேர்ந்த திருமணி என்ற 22 வயது இளைஞர் தலையில் காயம் பட்டு உயிரிழந்தார்.

திருமணி தனது பெற்றோருடன் குல்மார்க்கிலுள்ள ரிசார்ட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்வீச்சில் சிக்கிக்கொண்டார். இதில், திருமணியின் தாயார் மற்றுமொரு உறவுக்காரர் காயமடைந்துள்ளனர்.
போலீஸ் டிஜிபி சேஷ் பவுல் வாய்ட் கூறுகையில், இரண்டு, மூன்று வாகனங்கள் மீது குண்டர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதில் சென்னை பயணி பலியாகியுள்ளார் என்றார். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, திருமணியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், "எனது தலை அவமானத்தால் தொங்கிப்போயுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிவிட்டது, இது மிக சோகமான சம்பவம் என்றும் முதல்வர் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
விருந்தினரை கொன்றுள்ளோமா?

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா டுவிட்டரில் கூறுகையில், "ஒரு சுற்றுலாப் பயணி சென்ற வாகனத்தின் மீது கல்வீசி கொன்றுள்ளோம், விருந்தினரைக் கொன்றுள்ளோம். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து