முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் நான்தான் பிரதமர்: ராகுல்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராக பதவியேற்பேன் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு பிரதமராக பதவி ஏற்பீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது,

வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும். உத்தரப் பிரதேசதத்தில் பா.ஜ.க.வுக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் அணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவியில் அமருவேன்.  கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரசை ஊழல் கட்சி என விமர்சிக்கிறார். ஆனால் எடியூரப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்டை கூறுகிறார். 35,000 கோடி ரூபாய் ஊழல் செய்த ரெட்டி சகோதரர்களின் ஊழலை கர்நாடக மக்கள் இன்னமும் மறக்கவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து