முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,  சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மே 14ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழகத்துக்கான 4 டி.எம்.சி. தண்ணீர் விவகாரத்தில் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தாமதம் பற்றி கருத்து தெரிவித்தார். அதாவது, சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பத் தயாராக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி வழக்கில், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உரிமையை எந்த காலத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார்.

மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசுக்கு வரும் ரூ. 100 வருவாயில் ரூ. 70 அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது என்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து