முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      தமிழகம்
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு சுற்றுலா சென்றவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரங்கல் - அனுதாபம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம், குல்மார்க் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதில், பேருந்தில் பயணம் செய்த  திருவள்ளூர் மாவட்டம், பழவேடு, கரிமேடுவைச் சேர்ந்த ராஜவேலு என்பவரின் மகன் திருமணிசெல்வம் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமணிசெல்வத்தின்  குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பாக திரும்ப...

இந்த துயரச் செய்தியை அறிந்தவுடன், உயிரிழந்த திருமணிசெல்வத்தின் உடலை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதன் பேரில், புது டெல்லிலுள்ள தமிழ்நாடு இல்ல உயர் அதிகாரிகள் இறந்தவரின் உடலை சென்னை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து சுமார் 130 நபர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு புது டெல்லியிலுள்ள தமிழ் நாடு இல்ல அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உதவிபெற எண்கள்

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப தேவையான உதவிகளை பெற டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் தொலைபேசி எண் 011-24193450, 011-24193100 மற்றும் 011-24193200 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும், வருங்காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து பிற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கள் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்து கொண்டு, தங்கள் பயணத்தை திட்டமிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.3 லட்சம் நிதியுதவி...

இந்த துயரச் சம்பவத்தில், உயிரிழந்த திருமணிசெல்வம் இறந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து