முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.7.46 கோடியில் புதிய குடிநீர் பணிகள்-கலெக்டர் தகவல்

புதன்கிழமை, 9 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பாண்டிகண்மாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 56 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.26.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம்; மாவட்டம் பரமக்குடி அருகே பாண்டிக்கண்மாய் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக  மாதந்தோறும ஒரு  கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்  விளக்கி கூறப்படுகிறது.  இந்தமுகாம் குறித்து இக்கிராம பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மொத்தம் 121 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்;வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய முகாமில் தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்து மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.26லட்சத்து 12ஆயிரத்து 173 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பாண்டிக்கண்மாய் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.2.30 லட்சம் மதிப்பில் நான்கு புதிய வளர்ச்சி  திட்டப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கப்பட்டடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
 மேலும் தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திடும் வகையில் அலுவலர்களுக்கு உத்தரவு இடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 2016-2017-ஆம் நிதியாண்டில்  நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் தேவைக்காக ரூ.12.95 கோடி மதிப்பில் 1,153 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  நடப்பாண்டில் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக இதுவரை ரூ.7.46 கோடி மதிப்பில் 311 புதிய பணிகளுக்கு நிர்வாக  அனுமதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதுதவிர  பொதுமக்கள் குடிநீர் வேண்டி கோரிக்கை வைக்கும்  பட்சத்தில் அதனை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவைக்கேற்றவாறு புதிய குடிநீர்; ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உப்புநீரை குடிநீராக மாற்றம் செய்திட ஏதுவாக மொத்தம் 101 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னேற்றத்தில் உள்ளன.
அதேபோல வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் 98 ஊரணிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.20.15 கோடி மதிப்பில் 53 கண்மாய்களிலும்,  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  அரசாணை 50-இன் கீழ் 112 ஊரணிகளில் தூர்வாறும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பாண்டிக்கண்மாய் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாகச் சென்று அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்திற்கு தேவையான குடிநீர்; வசதி மற்றும் கழிப்பறைக்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை எந்தவித தடையுமின்றி விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார். இம்முகாமில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பி.ராஜா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்;ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்;ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வ.முருகானந்தம், தாட்கோ மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், பரமக்குடி வட்டாட்சியர் பரமசிவம் உட்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து