முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலாதேவிக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

புதன்கிழமை, 9 மே 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,  கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டையை சேர்ந்த உதவி பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவர் கைது...
மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல்போனில் பாலியல் ரீதியாகப் பேசியதாக கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் நிர்மலாதேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்பிஏ துறை உதவிப் பேராசிரியர் முருகனை கைது செய்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருவரையும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் நேற்று விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து