முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

புதன்கிழமை, 9 மே 2018      அரசியல்
Image Unavailable

பெங்களூர், கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. பிரசாரம் இன்றுடன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.

12-ம் தேதி தேர்தல்...

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 12-ம் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.

தீவிர தேர்தல் பிரசாரம்

கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

ராகுல் - சோனியா

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா 224 தொகுதிகளையும் சுற்றி வந்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வேட்பாளர்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சோனியாவும் தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

இறுதி கட்ட பிரசாரம்

காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, எடியூரப்பா வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி 25-க்கும் மேற்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசினார். கடந்த 2 மாதமாக கர்நாடகாவில் நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. நேற்று பா.ஜ.க.-காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும் என தெரிகிறது.

ரூ.200 கோடிக்கு மேல்...

இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளனர். நாளை வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெறும். கடந்த 2 மாதமாக தேர்தல் அதிகாரிகள் நடத்திய வேட்டையில் ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. எனவே பணப்பட்டுவாடாவைத் தடுக்க 11-ந்தேதி தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

ஓட்டுப்பதிவை சுமூகமாக, அமைதியாக நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவு ஓட்டுப்பதிவை நடத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் கமி‌ஷன் சில புதுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

15-ம் தேதி முடிவுகள்...

12-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தற்போது கத்திரி வெயில் காலம் என்பதால் பெரும்பாலும் மதியத்துக்குள் அதிக அளவு வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 15-ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் 223 தொகுதிகளின் முடிவு 15-ம் தேதி மதியத்துக்குள் தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து