முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பரிசு பெற்றவர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வாழ்த்து

வியாழக்கிழமை, 10 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- சென்னையில் கடந்த 8-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் 2015-2016-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவத் துறையின் கீழ் சிறப்பாக பணியாற்றியமைக்காக வழங்கப்பட்ட பரிசு மற்றும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  
 சென்னையில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2015-2016-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்பநல திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றியமைக்காக குடும்பநலத் திட்ட துணை இயக்குநர் மரு.ஏ.சகாய ஸ்டீபன் ராஜை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.என்.ஆர்.நாகநாதனுக்கும், பிரசவத்தின் போது பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த வட்டார மருத்துவ அலுவலர் மரு.வி.சரவணனுக்கும், மயக்கமருந்து வழங்கி அறுவைச் சிகிச்சை பணிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த மரு.கே.கருணாகரனுக்கும் என மூன்று மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
 அதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜனை மேற்குறிப்பிட்டுள்ள குடும்பநலத்துறை துணை இயக்குநர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள். இந்த நிகழ்வின் போது  பரமக்குடி துணை இயக்குநர் மரு.மீனாட்சி  அவர்கள் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து