புதுச்சேரி விழாவில் சுவாரஸ்யம்: கவர்னருக்கு மொழிபெயர்ப்பாளராக மாறிய நாராயணசாமி

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      புதுச்சேரி
narayanasamy 2017 10 21

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் பங்கேற்ற கம்பன் விழா கருத்து வேறுபாடுகளை மறந்து சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக மாறியது.

கம்பன் விழா மேடையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமர்ந்திருந்தார். அப்போது கவர்னர் கிரண்பேடியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேச அழைத்தனர். தமிழ் தெரியாததால், தான் பேசுவதை மொழி பெயர்த்துக் கொடுக்குமாறு கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை அழைத்தார்.

நாராயணசாமி எந்த தயக்கமும் இன்றி கிரண்பேடிக்கு அருகில் சென்று அவர் பேசுவதை மொழிபெயர்க்கத் தயாரானார். அப்போது கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறந்து இரு தரப்பினரும் நகைச்சுவையாகப் பேசி மனம் விட்டு சிரித்தனர். இதனால் கம்பன் விழா அரங்கே சிரிப்பலையில் மிதந்தது. பிறகு கிரண்பேடி ஆங்கிலத்தில் உரையாற்ற அதனை நாராயணசாமி தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து